• Breaking News

    சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 3 வாகனங்களை விபத்துக்குள்ளாக்கிய ஒரே நாய்..... 5 பேர் காயம்

     


    சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஆம்னி பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த கார் ஆம்னி பேருந்தின் பின்புறம் மோதியது. அந்த காரின் பின்புறம் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

    அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்டதால் காரில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments