3 பேர் கொலை..... 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகே உடப்பன்குளத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த இரு தரப்பு மோதலில் காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம் பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.இது குறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு. குற்றவாளிகள் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,' குற்றத்தின் தன்மை மரண தண்டனை விதிப்பதற்கு போதுமானதாக இல்லை. உச்சநீதிமன்றம் விதித்துள்ள அளவுகோள், இந்த வழக்கில், மரண தண்டனை விதிக்க போதுமானதாக இல்லை' எனக் கூறியுள்ளனர்.
மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் 4 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
No comments