• Breaking News

    புதுக்கோட்டை: அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.... 3 பேர் பலி..... 4 பேர்‌ படுகாயம்

     


    புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்தில் 2 கார்கள் மற்றும் ஒரு சிறிய சரக்கு ரக வாகனங்கள் என்று 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments