பெண்ணாக மாற ஆசை..... ஆணுறுப்பை அறுத்ததில் துடிதுடித்து பலி.... 2 திருநங்கைகள் கைது
தென்காசி மாவட்டத்தில் உள்ள பருப்பு மாடி பகுதியில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் சிவாஜி கணேசன் என்ற சைலு கடந்த இரண்டு வாரங்களாக தங்கி இருந்தார். இதில் சைலு தூத்துக்குடியை சேர்ந்தவர். இவர் ஆணாக இருந்த நிலையில் திருநங்கையாக மாறியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சைலு வீட்டில் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மகாலட்சுமி உட்பட பிற திருநங்கைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சைலுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது சைலு ஆண் ஆக மாற விரும்பியாதால் மகாலட்சுமி மற்றும் மதுமிதா ஆகிய திருநங்கைகள் சேர்ந்து அவருடைய ஆணுறுப்பை வெட்டியுள்ளனர். இதில் அதிக ரத்தப்போக்கு வெளியேறி அவர் உயிரிழந்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே பெண்ணாக மாற ஆசைப்பட்ட பலருக்கு இது போன்ற ஆணுறுப்பை அறுத்துள்ளனர். மேலும் இவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
No comments