2 பேருடன் குடும்பம் நடத்திய பெண்..... இரண்டாவது கணவனை கொலை செய்த முதல் கணவன்
பெங்களூர் அருகே கடந்த மாதம் 19-ஆம் தேதி ரயில் தண்டவாளையத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். அவரது தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரது சட்டை பையில் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு எடுக்கப்பட்ட டிக்கெட் இருந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சடலமாக மீட்கப்பட்டவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. அவர் கிரானைட் பாலிஷ் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரை காணவில்லை என ஏற்கனவே குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லோகநாதனுக்கும் ஓசூரில் பூ வியாபாரம் செய்யும் சத்யா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சத்யாவிற்கு ஏற்கனவே வரதராஜன் என்பவருடன் திருமணம் ஆனது. அதன் பிறகும் சத்யா லோகநதனுடன பழகி அவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்தனர்.
இதனையடுத்து சத்யா திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இரண்டு பேருடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யாவிற்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த லோகநாதன் அவருடன் தகராறு செய்துள்ளார். இந்த பிரச்சனை போலீசாரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி லோகநாதனிடம் வாங்கி பொருட்களை சத்யா திரும்ப கொடுத்துவிட வேண்டும் என பேசி முடித்தனர். இதனை தொடர்ந்து சத்யா பொருட்களை கொடுப்பதற்காக லோகநாதனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த வரதராஜனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து லோகநாதன் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் தூக்கி வீசியது தெரியவந்தது. தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என லோகநாதன் கூறியதால் தனது கணவரிடம் சொல்லி அவரை கொலை செய்ததாக சத்யா போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதனால் சத்தியா, வரதராஜன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments