திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் மார்ச் 29ல் முதல்வர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம்..... மேடை அமைக்கும் பணியை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆய்வு
திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் மார்ச் 29ல் முதல்வர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணியை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக, மாவட்ட மகளிர் அணி , மகளிர் தொண்டரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் வருகிற 29ந்தேதி நடைபெறவுள்ளது. மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆரணி மாலா, குடியாத்தம் புவியரசி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். ஏற்பாடுகளை மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் மற்றும் துணை அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்சாமி, நிர்வாகிகள் வேலாயுதம், ராமசாமி, தெய்வேந்திரன், அரவிந்த் மணிராஜ், சமுத்திரகனி, அன்பரசு, சிவன், மாடசாமி, சுடர்ராஜ், சுப.காளிமுத்து, இசக்கிமுத்து, சீனிபாண்டி, ராமகிருஷ்ணன், அன்பழகன், ஜெகநாதன், பெரியசாமி, சுரேஷ், ராம்குமார், மாயாண்டி, தங்கேஸ்வரன், சுந்தரபாண்டியபுரம் மாரியப்பன், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments