நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26வது கல்லூரி நாள் விழா


 சென்னை, மேடவாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26வது கல்லூரி நாள் விழா 22.03.2025 சனிக்கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

  இந்த நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி.உமாதேவி வரவேற்புரையாற்றினார். இயக்குனர் (அகாடமிக்) டாக்டர் வி.கருணாநிதி கல்லூரியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கை வாசித்தார். கல்லூரியின் தலைவர் கே.லோகநாதன் தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் எல்.நவீன் பிரசாத், நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

  மேனாள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகரன், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர், கலைமாமணி சின்னி ஜெயந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கல்லூரி நாள் விழா சிறப்புரையாற்றி, பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவியர் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு கோப்பை (CUP) மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர். 

    கல்லூரி நாள் விழாவில், கல்லூரி செயலர் வி.எஸ்.மகாலட்சுமி, துணைத் தலைவர் எல்.அர்ச்சனா மற்றும் கே.பார்த்தசாரதி, வி.இராமகிருஷ்ணமூர்த்தி, டாக்டர் எஸ்.ரகு, வி.எஸ்.ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments