ஒடிசா ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் பலி..... 25 பேர் காயம்.....

 


ஒடிஷா மாநிலத்தின் சௌத்வார் பகுதியில் இன்று (மார்ச் 30) காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மாங்குளி என்ற பயணிகள் நிறுத்தம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களூருவில் இருந்து காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்த பெங்களூரு-காமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து முயற்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments