மார்ச் 23-ல் திமுக அரசுக்கு ஷாக் கொடுக்க அரசு ஊழியர்கள் திட்டம்
தமிழக அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டவைகள் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்து விட்டது.
அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 4 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பட்ஜெட்டில் வெளியான ஈட்டிய விடுப்பை சரண் செய்வதற்கான புதிய நடைமுறை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மேலும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களின் போராட்டம் தொடங்கும் என்றும் வருகிற 23ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஒரு குறிப்பிடத்தக்க வாக்குகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடையதாக இருக்கும் நிலையில் இது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
No comments