புதுக்கோட்டை: தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து..... 21 மாணவர்கள் காயம்
புதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான்பட்டி பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments