எலான் மஸ்கை சீண்டினால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை..... அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

 


அமெரிக்காவில் முக்கிய தொழிலதிபராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்காவில் பல நிறுவனங்களை நடித்து வருகிறார். இதற்கிடையில் எலான் மஸ்க் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக அவர் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் டிரம்புக்கும், எலான் மஸ்க்கும் இடையே நட்பு உருவானது. இதன் காரணமாக டிரம்ப் தனது நிர்வாகத்திலும் சேர்த்துக்கொண்டார்.

அதில் எலான் மஸ்கிற்கு டாஜ் துறையை ஒதுக்கினார். இந்த துறையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்க எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதன் காரணமாக பொதுமக்கள் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனங்களை கடுமையாக தாக்கத் தொடங்கினர். அதோடு அவரது கார் ஷோரூமையும் தாக்கினர். இந்நிலையில் எலான் மஸ்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், டெஸ்லா கார் மீது தாக்குதல் நடத்துபவருக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது, எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை தாக்கும் பயங்கரவாத ரவுடிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பதை பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒருவேளை அவர்கள் எல் சால்வடாரில் உள்ள சிறைகளுக்கு கூட செல்லப்படலாம். அது எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை என்று அவர் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments