பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.2000 திருட முயன்ற இரு பெண்கள் கைது
கன்னியாகுமரி மாவட்டம் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சீதாதேவி(49). நேற்று முன்தினம் சீதாதேவி வட்டவிளை பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மார்த்தாண்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வெட்டுவெண்ணி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது தனது கைப்பையில் இருந்து 2000 ரூபாய் பணத்தை இரண்டு பெண்கள் திருட முயன்றதை சீதா தேவி பார்த்துவிட்டார். உடனடியாக அவர் சத்தம் போட்டு சக பயணிகள் உதவியோடு இரண்டு பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி அஞ்சலி(29), அருள்பாண்டியன் மனைவி பவானி(29) என்பது தெரியவந்தது.
இருவர் மீதும் கடையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments