• Breaking News

    ராஜ நாகம் கடித்ததில் 20 வருட பாம்பு பிடி வீரர் பலி

     


    கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருந்த நிலையில் அந்த பகுதியில் வீட்டுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு பகுதியில் ஒரு விஷப் பாம்பு புகுந்தது. 

    அது கொடிய விஷம் உள்ள ராஜநாகம் என்று கூறப்படும் நிலையில் அந்த பாம்பை பிடிப்பதற்காக சந்தோஷ் சென்றார்‌.அப்போது அவரை பாம்பு கடித்து விட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments