இன்றைய ராசிபலன் 18-03-2025
மேஷம் ராசிபலன்
நீங்கள் வாழ்க்கையையினையும், அதன் சிக்கல்களையும் மிக ஆழமாகத் தேடிப் பார்த்த நேரங்கள் உள்ளன. மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். கொட்டிய பாலைப் பற்றி கவலைபடாமல், வாழ்க்கையை வளமாக்கும் நேரம் இதுவாகும். நன்றியுணர்வு என்பது நீங்கள் மறந்துவிடுகின்ற ஒன்று. இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுக்கு உதவிய நபர்களுடன் மீண்டும் பழகுங்கள். எங்கள் வார்த்தையினைப் பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டியாளர். அவ்வப்போது, ஒரு முறை ஓய்வு எடுப்பதற்கு நினைவிற் கொள்ளுங்கள். மிகவும் கஷ்டத்தில் இருக்கும் போது கூட, நீங்கள் நல்லது செய்யவே விரும்புகிறீர்கள். முன்னேறுங்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். மேலும், இது எதிர்மறை சிந்தனையிலிருந்து உங்கள் மனதை மாற்றிவிடும்.
மிதுனம் ராசிபலன்
உங்கள் வீட்டில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயங்களே, உங்களை விட வேறு யாரும் சரியாகச் செய்து விட முடியாது, அதனால் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். இந்த வேலையை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மற்றவர்களை ஏமாற்ற எப்போதும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்களிடம் உள்ள வேடிக்கையான யோசனைகளை வெளிக்காட்ட ஆசைப்படலாம், ஆனால் அதை வெளிக்காட்ட இது சரியான நாள் இல்லை.
கடகம் ராசிபலன்
இன்று உங்கள் மனதில் நிறைய விஷயங்களைச் சிந்தித்து வருகிறீர்கள், ஆனால் அந்த விஷயங்களை விரைவாகச் சிந்திக்க வேண்டாம். உங்களிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள நல்லெண்ணம் கொண்ட நபர்களால் கவரப்படுவீர்கள். உங்கள் மனதை வலுவாக வைத்திருங்கள், நீங்கள் கேட்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம். சிக்கலான விஷயங்களை மட்டும் நிராகரிக்க வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு சிக்கலுக்கு மட்டும் தீர்வு காணுங்கள்.
சிம்மம் ராசிபலன்
சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.
கன்னி ராசிபலன்
இப்போது உங்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உங்கள் மனம் செயல்படாமல் இருக்கும். இப்போதைக்கு புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். யோகா போன்றவற்றைசெய்வதற்கு முயலவும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உருவாக, நீங்கள் உங்கள் மனதை எவ்வளவு நேர்மறையாக வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அதிகமாகஉங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். பொறுமையாக இருங்கள். புதிய யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களுடன் பேசுங்கள்.
துலாம் ராசிபலன்
உங்களது தனித்திறன்களை அப்படியே அமைதியாக வைத்திருக்க வேண்டாம் . உங்களது படைப்பாற்றலைப் வெளிக்கொணர்ந்து, அவற்றை உலகுக்குக் காட்டுங்கள். உங்களது புத்தாக்கக் கருத்துக்களால் உங்களை நீங்களே ஆச்சரியப்படுத்தி இருக்கிறீர்கள். இது உங்களது பணியிலும், சமூக தொடர்பிலும் கூட, சாதகமான நிலையினை ஏற்படுத்த முடியும். இன்று, உங்களது லட்சியமும், உந்துதலும் உயர்ந்ததாக இருக்கும். அன்பினது சின்னஞ்சிறிய வெளிப்பாடுகளால், நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உங்களது உறவினர்களும், நண்பர்களும் தெரிவிப்பார்கள்.
விருச்சிகம் ராசிபலன்
பாராட்டுக்கள் என்பது உங்களைப் பாராட்டிய நபரை நீங்கள் நினைவிற் கொள்வதற்கான சரியான வழியாகும். நாங்கள் மனதளவில் செய்யாத புகழ்ச்சியைப் பற்றிப் பேசவில்லை. மாறாக, உண்மையான கருத்துகளைப் பற்றிப் பேசுகிறோம். கடந்த சில நாட்களாக நீங்கள் ஒருவரின் கவனத்தைப் பெற முயல்கிறீர்கள். அந்த முயற்சியை நீங்கள் அவசரமாகச் செய்ய வேண்டாம். பொறுமையாக இருந்து அதை மெதுவாகச் செய்யுங்கள்.
தனுசு ராசிபலன்
உங்களுக்கு ஏற்படும் சந்தேகம் உங்களைப் பாதித்துள்ளதால், நீங்கள் ஆழமற்ற நீரில் மூழ்கியது போன்று உணர்கிறீர்கள். இதிலிருந்து வெளியேறி உங்கள் மனதைச் சரி செய்ய வேண்டிய நேரம் இது. இப்போது உங்களுக்கு முன்னால் உள்ள விருப்பங்கள், அனைத்தும் உங்களுக்கு நன்றாகத் தெரியத் தொடங்கும். நீங்கள் குழந்தையாக இருந்த போது யாரால் உங்களுக்காக முடிவெடுக்க முடியும் என்று நீங்கள் விரும்பினீர்களோ, அதே போன்று செய்வீர்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாள வேண்டியிருந்தால், நீங்கள் மெதுவாகச் செயல்படுங்கள். ஒரு நேரத்தில் ஒரு படி எடுத்து செயலாற்றுவதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் ராசிபலன்
உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பும் சில நபர்கள் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய நபர்களை மகிழ்விப்பதில் உங்கள் ஆற்றலை மையப்படுத்த வேண்டாம். நீங்கள் விரும்பும் தீர்வினை, காலத்தால் மட்டுமே கொடுக்க இயலும். உங்களது கவலைகளை எதிர்கொள்வது உங்கள் விருப்பப் பட்டியலில் ஒருபோதும் இருந்ததில்லை. இன்று, நீங்கள் நினைப்பதை விட நீங்கள் வலிமையானவர் என்பதைக் அறியக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.
கும்பம் ராசிபலன்
நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள், கடுமையான வார்த்தைகளைப் பேசுவது எந்தவொரு சூழ்நிலையையும் மோசமானதாக மாற்றி விடும். இதனால் உங்களுக்குத் தாங்கிக் கொள்ள முடியாத மன அழுத்தமும், கட்டுப்படுத்த முடியாத கோபமும் உண்டாக்கும். இந்த நாளில் சிறிய ஓய்வு எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இந்த ஓய்வு உங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுப்பதுடன், உங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும். மிகுந்த கட்டுப்பாடு கொண்டவராக இருக்க வேண்டாம், உங்களிடம் உள்ள சில பொறுப்புகளை விட்டுவிட முடிவு செய்யுங்கள்.
மீனம் ராசிபலன்
வெளியே சென்று, நிறைய கற்றுக்கொள்ளுங்கள். இன்று, அதைத்தான் நீங்கள் செய்யவேண்டும். மழுங்கலான திறன்களைக் கூர்மைப்படுத்துங்கள். மேலும், நீங்கள் விரும்புகின்ற அல்லது சிறந்து விளங்குகின்ற ஒரு திறனை, ஆகச்சிறந்ததாக மாற்ற முயற்சி செய்யுங்கள். மன உறுதியோடு இணைந்த ஆர்வமானது, உங்களுக்கு நல்ல தொடக்கத்தைத் தரும். கற்றுக்கொள்வதற்கான நிறைய வாய்ப்புகள் உங்கள் வழியில் வருகின்றன. உங்களைப் பயன்படுத்திக்கொள்ள காத்திருக்கும் நபர்களிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அத்தகைய நபர்களிடமிருந்து விலகி இருப்பதற்காக, உங்களது உள்ளுணர்வு மற்றும் மனதின் தீர்ப்பைப் உபயோகியுங்கள்.
No comments