• Breaking News

    மயிலாடுதுறை: பெண்ணை 15 இடங்களில் கத்தியால் குத்திய நபரை அப்பகுதி மக்கள் கல் மற்றும் கட்டையால் அடித்து தாக்குதல்

     


    மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசிக்கும் நிர்மலா (60) என்ற பெண்ணை, அவரது எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் இன்று காலை சிறிய கத்தியைக் கொண்டு நிர்மலாவின் வயிறு உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த நிர்மலா மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கான முழுமையான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீசார் பிரேமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments