தென்காசி: முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்..... திமுக கவுன்சிலர் கோரிக்கை
முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் சிந்துஜா முத்துசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முக்கூடல் பேரூராட்சி மன்ற 14வது வார்டு திமுக கவுன்சிலர் சிந்துஜா முத்துச்சாமி பேரூராட்சி செயல் அலுவலர் லோபோ முத்திரையிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டு பகுதிகளில் பல இடங்களில் கழிவு நீர் கால்வாய் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பழுதடைந்துள்ள கழிவு நீர் கால்வாயை சீரமைப்பதற்கும் மற்றும் தேவைப்படும் இடங்களில் சிறு பாலங்கள் அமைப்பதற்கும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து , நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கி நிறைவேற்றித்தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments