கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.14 லட்சம் பறிமுதல்.... ஒருவர் கைது
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வைத்து கஞ்சா தொடர்பாக முன்பதிவில்லா பேட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நவநீதகிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து அவர் வைத்திருந்த பெட்டியில் சோதனை செய்தபோது 14 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments