• Breaking News

    நெஞ்சைப் பிளக்கும் கொடூரம்..... 14 வயது மகளை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை

     


    சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவர், அரசு பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த, லாரி டிரைவர் குமரேசன், 50, என்பவர், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.இதுகுறித்து மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம், தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். மாணவியின் தந்தையை வரவழைத்த ஆசிரியை, சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், குழந்தைகள் உதவி மையத்தில் புகார் கூறினார். அதனடிப்படையில், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார், விசாரணையை துவங்கினர்.

    இந்த விசாரணையில், லாரி டிரைவர் குமரேசனுக்கு, சிறுமியின் தாயாருடன் பழக்கம் இருந்துள்ளது. கடந்த, பிப்., 17ம் தேதி, வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குமரேசன் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். பிப்., 20 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில், சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயாரும், டிரைவர் குமரேசனுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆத்தூர் மகளிர் போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த, லாரி டிரைவர் குமரேசன், 50, சிறுமியின் தாயார் ஆகியோர் மீது, 'போக்சோ' மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

    No comments