பாட்டாளி மக்கள் கட்சி மே11, சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மகாபலிபுரம் மாநாடு குறித்து கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றியம் கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் வருகிற சித்திரை மே 11 நடைபெறும் சித்திரை முழு நிலவு இளைஞர்கள் பெருவிழா மகாபலிபுரம் மாநாட்டிற்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர்.வ.மு. பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மாவட்ட செயலாளர் மாநாட்டிற்கு கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதி சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் வருகின்ற 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக திகழ நமது மருத்துவர் ஐயாவின் கரத்தை வலிமைப்படுத்த  15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூட வேண்டும் என்று சின்னையா ஆணையிட்டு இருக்கிறார்.

 அதற்கு நமது கும்மிடிப்பூண்டி தொகுதி பொன்னேரி தொகுதி சேர்ந்த பாட்டாளி சொந்தங்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் சென்று அழைப்பிதழ் வழங்கி வரவேற்க தயாராக இருக்கிறது மாவட்ட நிர்வாகம் என தெரிவித்தார்.


 இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட இளைஞர் அணி சங்க செயலாளர் வடிவேல் மாவட்டத் தலைவர் ரவி மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் டிலிபாபு மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சுதாகர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் முன்னாள் நகர செயலாளர் வடிவேல் நகரத் தலைவர் அஸ்வின்  கண்ணன் கும்மிடிப்பூண்டி நகர பொறுப்பாளர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments