தூத்துக்குடி: பேருந்தில் பயணித்த 11ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று காலை 11 ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் என்ற அந்த மாணவன் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்து மறைத்து மாணவனை கீழே இழுத்து தள்ளியது. பின்னர் அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக வெட்டினர்.
அப்போது பயணிகள் சத்தம் போட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தேவேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments