திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம். எஸ் கே.ரமேஷ்ராஜ்.அவர்களின் தலைமையில் மாவட்ட அவை தலைவர்மு.பகலவன்,கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கி வே.ஆனந்தகுமார், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் .நா.பரிமளம், பொது குழு உறுப்பினர்பா.செ.குணசேகரன் அவர்களின் முன்னிலையில் தலைமை கழக பேச்சாளர் சைதை.சாதிக், கண்டன உரையயாற்றினார்.
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கீழ்முதலம்பேடு ஊராட்சி,கவரைப்பேட்டை பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் பாஜக அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினார்கள்.
இதில் 100 நாள் பணியாளர்கள்,மாவட்ட,மாநில,ஒன்றிய,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,உள்ளாட்சி மன்ற இந்நாள்,முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 Comments