மயிலாடுதுறை: முன்னாள் மதிமுக பேரூர் கழக செயலாளர் காசிநாதன் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் 1000 பேருக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் முன்னாள் விமானப்படைவீரரும் முன்னாள் மதிமுக பேரூர் கழக செயலாளருமான காசிநாதன் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் மதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் ஆசிலாபுரம் பாண்டுரங்கன்,அழகிரி, செந்தில்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன்,மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் கொளஞ்சி, குத்தாலம் திமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை சந்துரு,துரை,காசி மணி, காசி வசந்த்,ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்றது.
No comments