• Breaking News

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் கழக கொடியேற்றி 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பம்மல் இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் உறுதிமொழி ஏற்று   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம் குழுத் தலைவர் பம்மல் தெற்கு பகுதி செயலாளர் வே.கருணாநிதி அவர்கள் ஏற்பாட்டில் பகுதி அவைத் தலைவர் ப.காளேஸ்வரன், பகுதி பொருளாளர் ஆர்.உமாசங்கர், பகுதி துணை செயலாளர் என்.பன்னீர்செல்வம்,துரை இளங்கோவன், பா.கவிதா, மாவட்ட பிரதிநிதி பா.டில்லி, மாநகர பிரதிநிதி பி.ஜே.வேந்தன், என்.கே.ரவிச்சந்தின்,இரா.கந்தவேலு, ரா.கோகுல்,சு.மனோகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எல்.பிரபு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் வி.ரவிச்சந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியபிரபு ஆகியோர் முன்னிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் கழக இருவண்ண கொடியேற்றி 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

    இதனை தொடர்ந்து பம்மல் தெற்கு பகுதிக்கு உட்பட்ட 5,6,7,8,10,11,12 ஆகிய வார்டுகளில் வட்ட கழக செயலாளர்கள் ஏ.அனிஸ்டன், வி.எஸ்.ஜெகநாதன்,மு.இன்பசேகர், என்.காந்தி, எச்.முகமது அப்பாஸ், எம்.சுகுமாரன், பி.ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாட்டில் வட்டங்கள் தோறும் கழக இருவண்ண கொடியேற்றி இனிப்பு,நலதிட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

     இதில் மாமன்ற உறுப்பினர்கள் கல்யாணி டில்லி, ரம்யா சத்தியபிரபு, ஆ.மதினாபேகம்,சத்யா மதியழகன், மாவட்ட மாநகர அணிகளின் துணை அமைப்பாளர்கள், பகுதி அணிகளின் அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    No comments