திருவள்ளூர் மாவட்டம், கும்மிடி ப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை யில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.
பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கைகளில் வளையல் போட்டு அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு உட்டசத்து பொருட்கள் வழங்கப்பட்டன.பின்னர் கருவுற்ற தாய்மார்கள் கருவுற்ற நாளில் இருந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு கர்ப்பினி தாய்மார்களுக்கு வழங்கி சீதன பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி , கவரப்பேட்டை வட்டார மருத்துவர் பிரீத்தி., மற்றும் கழக நிர்வாகிகள் மணிபாலன் ,நமச்சிவாயம் ராமஜெயம்,பாஸ்கர், சிலம்பரசன், குமார், நரேந்திரன் ,அறிவழகன், சுரேஷ் உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments