• Breaking News

    தூத்துக்குடி: குழந்தை பிறந்த 10 நாளில் கழிப்பறையில் வழுக்கி விழுந்து இறந்த இளம்பெண்


     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் எலிசபெத்துக்கும் திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எலிசபெத் ராணி பிப்ரவரி 26-ஆம் தேதி பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

     மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எலிசபெத் நள்ளிரவு நேரம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்ததால் மயக்கமடைந்து சுயநினைவை இழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த எலிசபெத்தின் தாய் ஜெயாவதி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தனது மகளை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் எலிசபெத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்த பத்தாவது நாளில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    No comments