ஒரே போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு HIV தொற்று உறுதி

 



கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரியில், ஒரே போதை ஊசியைப் பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. போதைப்பொருள் பழக்கத்தில் இருந்த சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை பரிசோதித்த போது, மேலும் 9 பேருக்கு இந்த தொற்று இருப்பது தெரியவந்தது. இவர்களில் 3 பேர் வடமாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம், போதைப்பொருள் அடிமைகள் ஒரே ஊசியை பகிர்ந்து பயன்படுத்தும் பழக்கத்தின் பீடிபாடுகளை உணர்த்துகிறது.

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடி சிகிச்சை பெறுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எச்.ஐ.வி பரவலை தடுக்கும் நோக்கில் பரிசோதனையும் விழிப்புணர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என மலப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments