• Breaking News

    தமிழக மக்கள் முதல்வரை ஏன் தாயுமானவர் என அழைக்கிறார்கள்..? TNPSC தேர்வில் கேள்வி.... ஜெயக்குமார் விமர்சனம்

     


    தமிழகத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் காலியாக உள்ள 540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில் குரூப் 2 பணியில் 534 பணியிடங்களும் குரூப் 2ஏ தேர்வில் 2006 பணியிடங்களும் அடங்கும். இதற்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் டிசம்பர் மாதம் ரிசல்ட் வெளியானது. இதைத்தொடர்ந்து குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் 2006 பணியிடங்களுக்கான மெயின் தேர்வு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.

    இந்நிலையில் குரூப் 2 ஏ வினாத்தாளில் 88வது கேள்வி பற்றி தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.அதாவது அந்த கேள்வியில் தமிழகத்தில் எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினை மக்கள் தாயுமானவர் என்று அழைக்கிறார்கள் என்று இருந்தது. இதற்கு விடையாக ஐந்து ஆப்ஷன்கள் இருந்தது. அதில் காலை உணவு திட்டம், விடியல் பயணத் திட்டம், நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர் மற்றும் விடை தெரியவில்லை என்று இருந்தது. மேலும் இதனை ஜெயக்குமார் விமர்சித்து இது TNPSC இல்லை DMKPSC என்று பதிவிட்டுள்ளார்.

    No comments