• Breaking News

    NO PARKING ஏரியாவில் காரை நிறுத்திய அனிருத்துக்கு ரூ.1000 அபராதம்

     


    தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துணிவு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பார்க்க ஏராளமானோர் தியேட்டர்களில் குவிந்தனர். அதோடு பல திரையுலக பிரபலங்களும் தியேட்டருக்கு சென்று விடாமுயற்சி படத்தை பார்த்து ரசித்தனர். இந்நிலையில் இசை அமைப்பாளர் அனிருத் சென்னை குரோம்பேட்டில் உள்ள தியேட்டரில் விடாமுயற்சி படத்தை பார்க்க சென்றுள்ளார்.

    அப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். ஏன்னெனில் அவரது கார் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டுள்ளதால் அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர் அபராதத்தை கட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அனிருத் காருடன் காவல்துறையினரிடம் சிக்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரது வாகனங்களையும் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

    No comments