• Breaking News

    பொடியனூர் சிவசக்தி பள்ளியில் சி.பி.எஸ்.இ.l தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பு பிரார்த்தனை,பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்


    பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதும் மாணவர்ளுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தங்களது பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.

    கீழப்பாவூர் ஒன்றியம், ஆவடையானூர்-பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில், சிபிஎஸ்இ தேர்வு வாரியம் நடத்தும் இந்த ஆண்டுக்கான 10 மற்றும் 12 வகுப்பிற்க்கான தேர்வினை எழுதும் மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவத் தலைவி ஜெய் ஸ்ரீ வரவேற்று பேசினார். பதினொன்றாம் வகுப்பு மாணவி தனிஷா விழாவினை தொகுத்து வழங்கினார்.

    பள்ளி செயலர் தினகரன், முதல்வர் நித்யா தினகரன், துணை முதல்வர் ரோஸ்லின் சிங் ஆகியோர் மாணவர்கள் தேர்வினை எவ்வாறு தன்னம்பிக்கையுடன் கையாள்வது என்பது குறித்து ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கினர். மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து அனைவரும் மாணவ மாணவிகள் தேர்வினை சிறப்பாக எழுதும் பொருட்டு கூட்டு பிராத்தனை செய்தனர். பிராத்தனைக்குப் பின் ஒவ்வொரு மாணவரும் அவரவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று அவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டனர்.

    மாணவி ஜெய் ஸ்ரீ நன்றியு கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியை ஜீவா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    No comments