தவெகவின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் Get out ஹேஷ்டேக்..... மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் ஈசிஆரில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெற இருக்கும் நிலையில் அந்த விழாவுக்கு நடிகர் விஜய் வருகை புரிந்துள்ளார். அவர் மேடைக்கு வந்தது முதலில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதாவது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக Get out ஹேஷ்டேக்குடன் கையெழுத்து இயக்கத்தை தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் நடிகர் விஜய் முதலில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்த நிலையில் அடுத்ததாக புஸ்ஸி ஆனந்த் கையெழுத்து போட்டார். இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்து போடுமாறு கூறினர். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். அந்த கையெழுத்து இயக்கத்திற்கான காரணத்தை ஆதவ் அர்ஜுனா அவரிடம் கூறிய போதிலும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். புஸ்ஸி ஆனந்தும் பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டார். இருந்தபோதிலும் அவர் விடாப்பிடியாக கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிவிட்டார். மேலும் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜயுடன் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments