Boy Friend வாடகைக்கு..... ஒரு நாளைக்கு ரூ.389.... வைரலாகும் போஸ்டர்
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் தற்போது கவனத்தை ஈர்த்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வாடகைக்கு உங்களுக்கு பாய் ஃபிரண்ட் வேண்டுமா.? ஒரு நாளைக்கு 389 ரூபாய் மட்டும் வாடகை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவைப்பட்டால் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இதுபோன்று காதலர்களை வாடகைக்கு விடும் நடைமுறை ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பையில் ரென்ட் எ பாய் ஃப்ரெண்ட் என்ற தளம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த சேவை 2022 ஆம் ஆண்டு பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments