முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்..... தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்......
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் சிலைக்கு, அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மரியாதை செலுத்தினார். அவர் 77 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார்.
சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் , 'இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளது, என்றார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ் கூறுகையில்:
எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க., மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் இன்று.அ.தி.மு.க., தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்றார்.
No comments