பழவேற்காடு அடுத்த தோணிரேவு கரிமணல் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த தோணிரேவு கிராமம் கரிமணல் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.ஒப்பந்ததாரர் ஏசு ராஜன் ஏற்பாட்டில் கிராம நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பூமி பூஜையில் தமிழில் மந்திரங்கள் ஓதி கிராம மக்களே பூஜை நடத்தினர். மேலும் பள்ளியில் பயிலும் 40 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடைநிற்றல் மற்றும் பள்ளி சேர்க்கை குறித்து திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் விளக்கம் அளித்தார்.
ஒப்பந்ததாரர் ஏசுராஜன் தனது பேரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கூடுதல் பள்ளி சீருடைகளை ஏற்பாடு செய்ய இதனை இன்ஸ்பெக்டர் காளிராஜ்,, பள்ளி தலைமை ஆசிரியர்பாண்டியராஜன்,தோணிரேவு கிராம நிர்வாகிகள் மற்றும் பெரியவர்கள் வழங்கினர்.வரும் கல்வியாண்டில் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உறுதியேற்றனர்.
No comments