• Breaking News

    ஆலங்குளத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் பெற சிறப்பு முகாம்.... பேரூராட்சி தலைவர் தகவல்


    ஆலங்குளத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் பெற சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் படியும் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் கேட்டுக்கொண்டுள்ளார்.

    .இது குறித்து ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர்  சுதா மோகன்லால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு வேளாண் அடுக்ககம், கிரையன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும்  ஆதார்எண் போன்று அடையாள எண் வழங்கப்படவுள்ளது.

    அதன்படி ஆலங்குளத்தில் விவசாயிகளுக்கு நில உடமை பதிவுகளை சரி பார்த்து தனி அடையாள எண்வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.   தினமும் நடைபெறும் இம்முகாமில் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியை விவசாயிகள் கலந்து கொண்டு அடையாள எண் பெற்றுக்கொள்ளாம். இம்முகாமிற்கு வரும் விவசாயிகள் ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கபப்ட்டுள்ள கைப்பேசி எடுத்து வர வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    No comments