திறமைக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்..... தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
சென்னை வண்டலூரில் உள்ள தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய்யத்தில் ஐக்கிய பொருளாதார மன்றம்,கிரசெண்ட் புத்தாக்கம் மற்றும் இன்குபேட்டர் மையம் இனைந்து பொருளாதர வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் பங்கு எனும்.தலைப்பில் கல்வி நிறுவனங்களின் மாநாடு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
2030ம் ஆண்டில் $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை கொண்ட தமிழ்நாட்டின் தொலைனோக்கு பார்வையில் கல்வி நிலையங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் பங்கு எனும் தலைப்பில் அமைச்சர் உரையாற்றினார்.
பின்பு " க்ரசெண்ட் இன்னோவேஷன் இன்குபேஷன் மையம்" புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் பற்றிய தொகுப்பு வெளியிட்ட அமைச்சர் இந்த மைய்யத்தில் ஆரம்பிக்கபட்ட புது நிறுவனங்களையும் துவக்கி வைத்தார்.
பின்பு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் உரையாற்றுகையில்: " தமிழ்நாடு 2030ம் ஆண்டு அமெரிக்க டாலர் 1 டிரில்லியன் பொருளாதாரமாக வளர வேண்டும் என்ற உயரிய இலக்கை வைத்துள்ளது. அதாவது சுமார் 87 லட்சம் கோடி ரூபாய் என்கிற பொருளாதாரமாக உயர வேண்டும். தற்போதைய மாநிலத்தின் பொருளாதாரம் சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் ஆக உள்ளது. 2030ம் ஆண்டு இலக்கை அடைய நம் வளர்ச்சி அதி வேகமாகவும், தற்போதைய உள்ள தயாரிப்பு மற்றும் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கவேண்டும் மேலும் தற்போது இருக்கும் மாநிலத்தில் உள்ள தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். இதற்காக மிக முக்கிய பங்கு உயர் கல்வி நிலையங்களுக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் உண்டு.
இந்த அதி வேக வளர்ச்சிக்கு நம் நாட்டின் மிக பெரிய சக்தி நம் நாட்டின் இளைய சமுதாயம் தான். உலகில் எந்த ஒரு நாட்டில் இல்லாத திறமை வாய்ந்த இளைஞர்கள் நம் நாட்டில் தான் உள்ளனர். எங்கள் துறையில் ஒரு அங்கம் வகிக்கும் ICT Academy தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 1,700 கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு உருவாக்க பயிற்சி அளித்து வருகிறது.
ஒரு கல்வி நிறுவனம் உண்மையாகவே ஒரு திறன் மிகு மையமாக வளர வேண்டுமென்றால் திறமைக்கு சுதந்திரம் மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும். புதுமை மற்றும் புத்தாக்கத்திற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
No comments