• Breaking News

    பழனி பஞ்சாமிர்ததுக்கே பஞ்சம்..... தேவஸ்தான ஸ்டால்களில் தட்டுப்பாடு.....


    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப்புகழ் பெற்ற அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம்,வெளி மாநிலம்,வெளிநாட்டினை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். அதே போன்று தை பூசம் அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள். தரிசனம் முடிந்த கையோடு பழனிக்கே பெயர் பெற்ற பஞ்சாமிர்தத்தை அனைத்து பக்தர்களும் வாங்கி செல்வார்கள். குறிப்பாக பஞ்சாமிர்தம் வாங்காத பக்தர்களே இருக்க மாட்டார்கள். பழனி தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்த ஸ்டால்களும் உள்ளன.  இந்த ஸ்டாலில் முறையான ஏற்பாடு செய்யாததால் பழனி அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பக்தர்கள் பலர் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் வாங்காமல் அருகில் உள்ள தனியார் கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பஞ்சாமிர்தங்கள் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்க  வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    No comments