மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சாட்டியக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
2025 - 26 ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நாகை மாவட்டம் சாட்டியக்குடியில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சித்தார்தன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஏமாற்றம் உரம் எரிபொருளுக்கு மானியம் குறைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை உள்ளிட்ட மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மத்திய பட்ஜெட்டின் நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு எதிராகவும், பட்ஜெட்டை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் அம்பிகாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்தையன், ஒன்றிய செயலாளர்கள் ஜீவாராமன், குமார், மார்க்ஸ், துணை செயலாளர் செல்லமுத்து, உள்ளிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments