கெட் அவுட் ஸ்டாலின் என்று சொல்ல மக்கள் தயார்..... நடிகை கஸ்தூரி
தி.மு.க.,வுக்கு எதிராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கெட் அவுட் ஸ்டாலின் என்று ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய போவதாக கூறியிருந்தார். அதன்படியே கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிட்டும் தொடங்கி வைத்துள்ளார்.
இந் நிலையில் சரியான மாற்று கிடைத்தால் கெட் அவுட் ஸ்டாலின் என்று சொல்ல மக்கள் தயார் தான் என்று நடிகை கஸ்தூரி சமூக வலை தள பதிவில் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இருப்பதாவது;
கெட் அவுட் ஸ்டாலின் என்று சொல்ல மக்கள் தயார் தான். சரியான மாற்று கிடைத்தால். தி.மு.க., கூட்டணி ஒற்றுமையாக பணம், பலம் அனைத்துடன் உள்ளது.
எதிர்க்கட்சியினரோ சிதறி உள்ளனர் .தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தள்ளி வைத்து மக்களுக்காக ஒரேமுகமாக போராடினால் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
No comments