பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக செயற்குழு கூட்டம் மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை கோன் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பெருங்களத்தூர் வடக்கு பகுதி அவைத்தலைவர் டி.ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது.
இதில் 4வது மண்டல குழு தலைவர் பகுதி கழக செயலாளர் டி.காமராஜ் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் அன்று எவ்வாறு பணியாற்றி வேண்டும் என்று உரையாற்றினார் இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மாவட்ட உறுப்பினர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிம்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments