• Breaking News

    மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன்..... விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     


    அமைச்சர் துரைமுருகன் உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்சனை என்பது பற்றியும் சிகிச்சை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அமைச்சர் துரைமுருகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    தற்போது சளி தொல்லையால் மூச்சு திணறால் ஏற்பட்டதால் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அமைச்சர் துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தனர். மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.

    No comments