• Breaking News

    திருமருகலில் மாபெரும் மருத்துவ இரத்ததான முகாம் நடத்தி அசத்திய சமூக சேவகர் என். விஜயராகவன்


    நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற பொது நல சங்க மாநில தலைவர் சமூக சேவகர் டாக்டர் என். விஜயராகவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை முன்னாள் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ஏ.பி. தமீம்அன்சாரி குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

     தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கம், காரைக்கால் விநாயக மிஷன் தஞ்சை கிரீன் டிரீஸ் தொண்டு நிறுவனம் மற்றும் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பொது மருத்துவம்,மகப்பேறு மருத்துவம்,அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல்நோய் மருத்துவம்,எலும்பு மருத்துவம்,காது மூக்கு தொண்டை மருத்துவம்,கண் மருத்துவம், பல் மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிற்கும் அனுபவம் வாய்ந்த  மருத்துவர் தலைமையிலான சிறப்புக்குழுவினர் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனையையும் அதற்கான பரிந்துரையையும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

     ‌ இன்னுயிர் தந்து இன்னுயிர் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தனது பிறந்தநாளில் என். விஜயராகவன் அவர்கள் ரத்ததானம் அளித்ததோடு இரத்ததானை முகாமையும் ஏற்படுத்தி அதில் ஏராளமானோர் தாமாக முன்வந்து ரத்ததானம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அறுசுவை அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமுருகன் சந்தைப்பேட்டையில் உள்ள வாசுதேவன் திருமண அரங்கில்  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

    இதில் கிராமப்புற கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் பால்கேன் மற்றும் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. மேலும் இவரது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் வணிகர்கள் உள்ளிட்ட  பலரும் இவருக்கு சால்வை அனுபவித்தும் ஆள் உயர மாலை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    No comments