எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை, காயத்ரி அறக்கட்டளை மற்றும் கணேஷ் எர்த் மூவர்ஸ் இணைந்து இலவசமாக வழங்கும் வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை, காயத்ரி அறக்கட்டளை மற்றும் கணேஷ் எர்த் மூவர்ஸ் இணைந்து இலவசமாக வழங்கும் வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை தலைவர் எஸ்.செந்தூர் பாரி தலைமையில், கோமாட்சு, எல்&டி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த முயற்சி, தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாப்பதும், புதுப்பிப்பதும் குறித்த முன் பார்வையுடன் துவக்கப்பட்டது. ஏற்கனவே, இதுபோன்ற ஆறு இயந்திரங்கள் தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களை ஆழப்படுத்தி, தண்ணீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த திட்டம், நீர் மேலாண்மையில் முக்கிய பங்காற்றி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு, உள்ளூர் சமூகங்களுக்கு நீர் பற்றாக்குறையை சமாளிக்க உதவுகிறது.
விழாவில் பேசிய செந்தூர் பாரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமூகப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராட இத்தகைய முயற்சிகளை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்நவீன இலவச மண் அள்ளும் இயந்திரம், நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு, எதிர்கால சந்ததிகளுக்காக நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பிரயாணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்ற உறுதிமொழியுடன் நிறைவடைந்தது.
இதில் தலைவர் - கட்டுமான உபகரண வணிகம் நிர்வாகிகள் விவேக் ஹஜேலா, சஞ்சய் கார்கலா, நாகானந்த், மஹேந்திர குமார், ரவி, எல்&டி நிர்வாகிகள் வாட்சன் ஆபிரகாம், ஹரிஹரசுதன், கோமட்சு நிர்வாகிகள் கைலாஷ், தில்லிபாபு, வடிவேல்,எக்ஸ்னோரா நிர்வாகிகள் மடிப்பாக்கம் சுப்ரமணியன், மோகன் முனவர்தீன், சீதாராமன், சங்கீதா உள்ளிட்ட நிர்வாகியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments