மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தங்களது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சந்தித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதனையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என கூறியுள்ளார். மேலும் அன்போடு வரவேற்று, அரசியல், கலை என பல்வேறு துறை சார்ந்த கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். கமல் சாருக்கு என் அன்பும் நன்றியும் என கூறியுள்ளார்.
No comments