இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு தென்காசியில் நடைபெற்றது
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) சுரண்டை காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தரமான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மிக சிறப்பாக செய்திருந்தனர். இதில் மிகச் சிறப்பாக களம் ஆடிய 50 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 50 இளம் வீரர்களுக்கும் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீநாத் ராமன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
No comments