ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய வாலிபர் தற்கொலை
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒரு பயங்கர விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். அதாவது தன்னுடைய சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ரிஷப் விபத்தில் சிக்கிய நிலையில் சிறிது நேரத்தில் அவருடைய கார் தீ பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்த இருவர் ரிஷப் யார் என்று கூட தெரியாமல் உயிரை காப்பாற்றினர். விபத்திலிருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ரிஷப் தன் உயிரை காப்பாற்றிய அந்த இருவருக்கும் சமீபத்தில் கூட பைக் வாங்கி கொடுத்தார்.
இந்நிலையில் ரிஷப் உயிரைக் காப்பாற்றிய புர்காஜி பகுதியைச் சேர்ந்த ரஜத் (25) தற்போது விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்டார். அதாவது அவர் மனு என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறந்தார். மேலும் ஒரு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள் என்று தற்போது பலரும் தேவனையுடன் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
No comments