குழந்தைகளுக்காக தினமும் விமானத்தில் வேலைக்கு சென்று வரும் பெண்
பொதுவாக வேலைக்கு செல்பவர்கள் பஸ், டூ வீலர் அல்லது ரயிலில் பயணிப்பது வழக்கம். சிலர் காரில் கூட பயணிக்கின்றனர். ஆனால் மலேசியாவில் உள்ள பினாங்கு என்ற பகுதியில் ரேச்சல் கவுர் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இவர் கோலாலம்பூரில் வேலை பார்த்து வருகிறார். முன்னதாக இவர் கோலாலம்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். அப்போது தனது குழந்தைகளை பார்ப்பதற்காக பினாங்குக்கு வார இறுதியில் வருவதுண்டு. ஆனால் தற்போது தனது குழந்தைகள் வளர்ந்து வருவதால், அவர்கள் கூடவே இருக்க இவர் தினமும் விமானத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.
தினமும் பினாங்கு பகுதியில் இருந்து கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்கிறார். விமானத்தில் பயணம் செய்வது அவருக்கு சிக்கனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கோலாலம்பூரில் வீடு வாடகை எடுக்க மாதம் சுமார் 1400 முதல் 1500 RM வரை செலவாகிறது.
சாப்பாட்டு செலவு முன்பு 600 RM வரை செலவான சாப்பாடு தற்போது 300 ஆக குறைந்துள்ளது. விமான மூலம் தினமும் சென்று வருவதால் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடிகிறது. பண்டிக்கை நேரத்தில் விமானத்தில் இடம் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனாலும் எப்படியாவது வீட்டிற்கு போய் விடுவேன் என்று அவர் கூறினார்.
No comments