• Breaking News

    காதல் திருமணம் செய்த வாலிபரை முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற கும்பல்

     


    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமுதுண்ணாகுடி கிராமத்தில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்துரு(20) கொத்தனாராக வேலை பார்க்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

    ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த பெண் சந்துருவை பிரிந்து சென்று விட்டார். நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த பேச்சி என்பவரது வீட்டிற்கு வெளியே நின்று சந்துரு கூலி பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 5 மர்ம நபர்கள் ஓடி வந்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சந்துரு பேச்சியின் வீட்டிற்குள் ஓடி சென்றார். ஆனாலும் அந்த ஐந்து மர்ம நபர்களும் சந்துருவை ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இதனால் முகம் சிதைக்கப்பட்டு சந்துரு துடிதுடித்து இறந்துவிட்டார்.

     இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்துருவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments