அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதோடு கஞ்சா மற்றும் சாராய விற்பனை போன்ற குற்ற செயல்களை தட்டிக் கேட்பவர்கள் படுகொலை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் சீர்கெட்டு வரும் சட்ட ஒழுங்குக்கு கண்டனம் தெரிவித்து இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதோடு திருக்கழுக்குன்றம் அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமா,ர் மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் உட்பட 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments