• Breaking News

    திமுகவில் சேர ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும்.... காளியம்மாள் டிமாண்ட்.?

     


    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் நேற்று அறிவித்தார். சமீப காலமாகவே கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்த காளியம்மாள் விலகுவதாக செய்திகள் பரவிய நிலையில் அவரே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதாவது சீமானிடம் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை காளியம்மாள் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீமான் தன்னுடைய மனைவி கயல்விழியை பொதுச்செயலாளராக்க விரும்பினார். இதன் எதிரொலியாக தன்னுடைய மனைவியை ஒரு நிகழ்ச்சியில் மேடை ஏறி அரசியல் கூட பேச வைத்தார்.

    ஆனால் காளியம்மாள் பொதுச்செயலாளர் பதவியை கேட்டதால் அவர் தட்டி விடப்பட வேண்டிய பிசிறு என்று சீமான் பகிரங்கமாக பேசினார். இது தொடர்பாக சீமான் பேசிய ஆடியோக்கள் வெளியான நிலையில் அது முதலே காளியம்மாள் மற்றும் சீமானுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மீனவ குடும்பத்தைச் சேர்ந்த காளியம்மாள் தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய புள்ளியாக திகழ்ந்தவர். இவர் தற்போது தமிழக வெற்றி கழகம், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் காளியம்மாள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். குறிப்பாக திமுகவிடம் ராஜ்யசபா எம்பி பதவியை காளியம்மாள் கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் காளியம்மாள் வைக்கும் டிமாண்ட் மிகப்பெரியதாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் காளியம்மாள் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவில் காளியம்மாள் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    No comments