• Breaking News

    மாசி மகம் திருவிழா.... புதுச்சேரி,காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

     


    புதுச்சேரியில் மாசி மகம் திருவிழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது வைத்திக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி கோவில்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கோவில்களின் உற்சவர்களும் எழுந்தருவார்கள். இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

    இந்நிலையில் நடப்பாண்டில் மார்ச் 13ஆம் தேதி மா சிமகம் திருவிழா நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால் வழக்கம் போல் அன்றைய தினம் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments